திரிசடை தீவில் வசிப்பவர்கள் கடலுக்குள் நாள்கணக்கில் மூச்சடக்கி வாழ முடியும் என்றும் அவர்கள் முத்துகளை ஒருபோதும் விலைக்கு விற்பதில்லை என்றும் மாறாக, தங்களது குலதெய்வமான சூதனியின் உதிர்ந்து விழுந்த பற்கள்தான் கடலில் முத்தாக விளைவதாகவும் ஆகவே அதை அறுவடை செய்து சூதனிக்குப் படைப்பது தங்களது பிறவிக் கடமை என்றும் நம்பினார்கள். திரிசடை தீவில் வாழ்வது மிகப் போராட்டமான ஒரு கலை. அங்கே கடல் உறங்குவதேயில்லை.
தீவுவாசிகள் மிக எளிமையானவர்கள். அவர்கள் கடல்நண்டுகளைப் போல தங்கள் வளைக்குள்ளாகவே ஒளிந்து வாழ்பவர்கள். வெளிஉலகம் மீது அவர்களுக்கு ஈர்ப்போ. அக்கறையோ இருப்பதேயில்லை. அந்தத் தீவு சங்கு போன்ற வடிவத்திலிருக்கிறது. எந்த சப்தமும் அதற்குள் சென்றால் அதிகமாகி விடும். ஆகவே அங்கே ஓசை அடங்குவதேயில்லை.
* நூலிலிருந்து…
Be the first to rate this book.