கவிதைகள், நாவல்கள் என்ற படைப்பாற்றல் வரிசையில் அடுத்ததாக அப்பாவின் நிழல் என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஒன்றினையும் தந்துள்ளார் ரத்தினமூர்த்தி. தொகுப்பில் வேறு வேறு தளங்கள் வேறு வேறு குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் என்று பலவிதமான மனிதர்களின் கதைகளைப் படைத்துள்ளார். இயற்கையோடும் சமூகத்தோடும் தன் சிந்தனைகளைச் செலுத்திக்கொண்டே இருப்பதன் மூலமே இவரால் உயிரோட்டமுள்ள படைப்புகளைத் தர முடியும் என்பதை இவரது எழுத்தை வாசிக்கின்றபோது உணர்ந்துகொள்ள முடிகிறது. கவிதைகளிலும் சரி நாவல்களிலும் சரி எவ்வாறு தன் எழுத்துக்கள் மூலம் நம்மை வசியப்படுத்தி வைத்திருந்தாரோ அதைப் போலவே இந்தச் சிறுகதைத் தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் நம்மை வசியப்படுத்தி விடுகிறார். ரத்தினமூர்த்தியின் படைப்புகளை வாசிப்பது என்பது அலாதியான சுகங்களையும் மனத்தாக்கங்களையும் தரவல்லது.
Be the first to rate this book.