அப்பா சிறுவனாக இருந்தபோது பல்வேறு சிறுகதைகள் போன்ற பால்யகால சம்பவங்களை உள்ளடக்கிய நாவல். முதன் முதலாக 1961-இல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு குழந்தைக்குமே தன் பெற்றோர் குழந்தையாக இருந்தார்கள் என்பதும் அவர்களும் குழந்தைப் பருவத்திற்கான சாகசங்களுடன் புத்திசாலித்தனத்துடனும் வளர்ந்தார்கள் என்பதும் கேட்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் ஆர்வமூட்டக் கூடிய ஒன்றுதான். இந்த நூலிலும் அலெக்சாண்டர் ரஸ்கின் தான் சிறுவனாக இருந்தபோது என்ன நடந்தது என்பதை தன் மகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார். கேட்டுக் கொண்டிருக்கும் பெரியவர்கள் தங்கள் பால்யத்திற்குத் திரும்புவதும், பால்யத்தை நினைவு கூர்வதும் அனிச்சையாக நடைபெறுகின்றது. வாசித்துக் கொண்டிருக்கின்ற சிறாருக்கோ ‘நாம் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை’ என்ற தன்னம்பிக்கை உணர்வும் நேர்மறை எண்ணங்களும் உதிப்பது இயற்கையாகவே நிகழ்கிறது. எப்போது வாசித்தாலும் எத்தனை முறை வாசித்தாலும் வாசிப்போரை அவர்களின் பால்யத்திற்கு அழைத்துச் செல்லும் அற்புத நூல் அப்பா சிறுவனாக இருந்தபோது.
Be the first to rate this book.