சாஷாவின் அப்பாவின் கதைகள் எல்லா அப்பாக்களின் எல்லா அம்மாக்களின் கதையும்தான்.சாஷா போல கதை கேட்க ஆசைப்படும் குழந்தைகளே கதை கேளுங்கள்.கதை கூற ஆசைப்படும் அம்மா,அப்பாக்களே கதை கூறுங்கள்.
அப்பா சிறுவனாக இருந்தபோது…!
சிறுவர் கதைகள்
எழுத்தாளர்: அலெக்சாந்தர் ரஸ்கின்
தமிழில்: நா.முகம்மது செரிபு
ஓவியங்கள்: லேவ் தொக்கோவ்
பக்கங்கள்: 144
வெளியீடு: ஆதி பதிப்பகம்
27-11-2021 பிறந்த எனது
மகனுக்காக….வாசித்த புத்தகம்….!
உங்களில் ஒவ்வொருவரும் எஞ்சியதை நீங்களாகவே கண்டுபிடித்தக் கொள்ள முடியும்.ஏன்னெனில் உங்களுடைய அப்பாவும் அவர் சிறுவனாக இருந்தபோது நடந்ததைப் பற்றி உங்களுக்குச் சொல்லக் கூடும்.அதுபோல உங்கள் அம்மாவும் கூற முடியும்.அவர்களுடைய கதைகளையும் கூடக் கேட்பதற்கு நான் விரும்புவேன்…!
- அலெக்சாந்தர் ரஸ்கின்
ஒரு தந்தையாக நா எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதை இந்த புத்தகம் எனக்கு உணர்த்திய பாடம்.தோழர் ரஸ்கின் தனது மகள்
சாஷாவுக்கு காதில் ஏற்ப்பட்ட காயம்யாற்ற கதைசொல்ல தொடங்கி பின்பு அப்படியே ரஸ்கினுடை சிறுவயது நினைவாக விரிகிறது இந்த கதை களம்.எனக்க சிறப்பபாக தோன்றியது நடந்த நிகழ்வை அப்படியே சொன்னது தான்…அறிவுறையில்லமால்…..
அப்பா சிறுவனாக இருந்தபோது செய்த குறும்பு தனம்,அபத்தங்கள்,சண்டைபோட்டது,அடம் பிடித்தது,செய்த தவறுகள்,பாராட்டுக்காக செய்த சொதப்பல்கள்,விளையாடியது,கவிதை எழுதியது,தான் படித்த பள்ளியை பற்றி,தனது சுமாரான படிப்பை பற்றி,தாத்தப்பாட்டியிடம் அடி வாங்கியதுயென….28 தலைப்புகளில் அழகாக ஆழமாக எழுதியுள்ளார் ரஸ்கின்.இதன் வழியே ரஸயாவின் அன்றைய காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் சேர்த்தே எழுதியுள்ளார்.
* அப்பா சிறுவனாக இருந்தபோது நாயை பழக்க முயற்ச்சி செய்து நாயிடம் கடிவாங்கியது
* அப்பா போராசிரியர் கையை கடித்தது
* அப்பா பூனையை பார்த்து குடிப்பது பாலை ஆட்டுவது வாலை கவிதை எழுதினேன்
* பார்க்கும் தொழில்கள் அனைத்தையும் நானும் அப்படி ஆக வேண்டும் ஆசைப்பட்டது
* தனக்கு பிடிக்காத இசை வகுப்பை பற்றி
* அப்பா எழுதக் கற்றுக்கொண்டது,புத்தகங்கள் வாசிப்பு குறித்து
* அப்பா முதல் முதல் மனம் புண்பட்டது எப்படி …?
* முதல் பார்த்த சினிமா பற்றி….புலி வேட்டைக்கு போனது பற்றி…ஆசிரியையை அப்பா ஏமற்றியது பற்றி
* அப்பாவின் பள்ளி விழா பற்றி நாற்காலி செய்தது பற்றி ..பாம்பைக் கொன்றதைப்பற்றியென
* என்னால் கதை ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க முடியாதபோது,எனக்கு தெறிந்த வேறு அப்பாக்களிடமிருந்து ஒன்றை நான் கடன் வாங்குவேன்.
* எப்படியிருந்தாலும் ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்தானே.ஆகவே இந்தக் கதைகளில் எவையும் கற்பனை செய்யப்பட்டவை அல்ல என்பதைக் காண்பீர்கள்.இவை எல்லாமே சிறுவர்களுக்கு நேர்ந்தவைகளே.
* எனக்கு நேர்ந்த எல்லாவிதமான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்த நான் முயன்றேன்
* பேராசையுடனோ,தற்புகழ்ச்சியுடனோ தலைக்கனத்துடனோ நடப்பது நல்லதல்ல என்பதை எனது சிறுமி புரிந்துகொள்ள விரும்பினேன்
* நான்கு வயதாக இருக்கும்போதே வாசிப்பதற்குக் கற்றுக் கொண்டார்.தனுது நாள் முழுவதையும் வாசிப்பதில் செலவிடுவதற்கு அவர் தயாராக இருந்தார்
* அதிக புத்தக வாசிப்பின் வாயிலாக சிறுவனாகிய அப்பா தனது கண் பார்வையைக் கெடுத்துக்கொண்டார் ஆகவே அப்பா கண்ணாடி அணிய வேண்டிவந்தது.
* அப்பா சிறுவனாக இருந்த போது அவரிடம் அடிக்கடி கேட்டப்பட்டது “நீ பெரியவனாகும்போது என்னவாக விரும்புகிறாய்…?
* விவாதம் செய்கின்ற போதெல்லாம்,தான் சொல்வதே சரி என எப்போதும் சாதித்தார் அவர் யாரையும் கேலி பேச முடியும்,ஆனால் வேறு எவரும் இவரைக் கேலி செய்யக் கூடாது…!
* கல்லூரியில் ஆங்கிலத்தையும் சரியாகப் படிக்கவில்லை.இப்போது அப்பாவுக்கு ஒரு அந்நிய மொழியும் தெரியாது.தனக்குத் தானே பழிவாங்கி கொண்டதாக இப்போது அவர் உணர்கிறார்.அவருக்கு விருப்பமான பல புத்தகங்களை அவை எழுதப்பட்ட மொழியில் அவரால் படிக்க முடியாது..!
இன்னும் பல கதைகள் இருக்கிறது இந்த புத்தகத்தில்…இப்படியே இருந்தால் நீ உருப்புடமால்தான் போவ என்று திட்டுவாங்கியவர் பின்நாளில்…ரஸ்ய இலக்கியத்தில் முக்கிய புள்ளியாக திகழ்ந்தார்.
ஓரு தந்தையாக நான் எனது மகனுக்கு எனது சொந்த வாழ்க்கையில் இருந்து சொல்ல இத்தனை இருக்கிறாத என்பதை இந்த புத்தகம்
எனக்கு நினைவுபடித்திருக்கிறது.இதில் ஓவ்வொரு தலைப்பையும் படித்த முடித்ததும் அதே தலைப்பில் நம் சிறுவயது நினைவுகள் கதை வடிவம் பெற்றுவிடும்…இந்த புத்தகத்தை வாசித்த அனைவரும் மறுநாளே….
“அப்பா சிறுவனாக இருந்தபோது” என்று கதை சொல்ல அல்லது கதை எழுத ஆரம்பித்திவிடுவர்கள் என்பது உறுதி….!
ஜந்த வருட காத்திருப்புக்கு பிறகு நான் தந்தையானதை கொண்டாட மிகச்சரியான புத்தகமாக எனக்காகவே எழுதியதர்க்காக இதயம் நிறைந்த நன்றிகள் தோழர் அலெக்சாந்தர் ரஸ்கின் அதை இனிமையாக மொழிபெயர்த்த தோழர் நா.முகமது செரிபுக்கும்.
நன்றி
கணேஷ் பாரி
27-11-2021
5 அப்பா சிறுவனாக இருந்தபோது…!
அப்பா சிறுவனாக இருந்தபோது…! சிறுவர் கதைகள் எழுத்தாளர்: அலெக்சாந்தர் ரஸ்கின் தமிழில்: நா.முகம்மது செரிபு ஓவியங்கள்: லேவ் தொக்கோவ் பக்கங்கள்: 144 வெளியீடு: ஆதி பதிப்பகம் 27-11-2021 பிறந்த எனது மகனுக்காக….வாசித்த புத்தகம்….! உங்களில் ஒவ்வொருவரும் எஞ்சியதை நீங்களாகவே கண்டுபிடித்தக் கொள்ள முடியும்.ஏன்னெனில் உங்களுடைய அப்பாவும் அவர் சிறுவனாக இருந்தபோது நடந்ததைப் பற்றி உங்களுக்குச் சொல்லக் கூடும்.அதுபோல உங்கள் அம்மாவும் கூற முடியும்.அவர்களுடைய கதைகளையும் கூடக் கேட்பதற்கு நான் விரும்புவேன்…! - அலெக்சாந்தர் ரஸ்கின் ஒரு தந்தையாக நா எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதை இந்த புத்தகம் எனக்கு உணர்த்திய பாடம்.தோழர் ரஸ்கின் தனது மகள் சாஷாவுக்கு காதில் ஏற்ப்பட்ட காயம்யாற்ற கதைசொல்ல தொடங்கி பின்பு அப்படியே ரஸ்கினுடை சிறுவயது நினைவாக விரிகிறது இந்த கதை களம்.எனக்க சிறப்பபாக தோன்றியது நடந்த நிகழ்வை அப்படியே சொன்னது தான்…அறிவுறையில்லமால்….. அப்பா சிறுவனாக இருந்தபோது செய்த குறும்பு தனம்,அபத்தங்கள்,சண்டைபோட்டது,அடம் பிடித்தது,செய்த தவறுகள்,பாராட்டுக்காக செய்த சொதப்பல்கள்,விளையாடியது,கவிதை எழுதியது,தான் படித்த பள்ளியை பற்றி,தனது சுமாரான படிப்பை பற்றி,தாத்தப்பாட்டியிடம் அடி வாங்கியதுயென….28 தலைப்புகளில் அழகாக ஆழமாக எழுதியுள்ளார் ரஸ்கின்.இதன் வழியே ரஸயாவின் அன்றைய காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் சேர்த்தே எழுதியுள்ளார். * அப்பா சிறுவனாக இருந்தபோது நாயை பழக்க முயற்ச்சி செய்து நாயிடம் கடிவாங்கியது * அப்பா போராசிரியர் கையை கடித்தது * அப்பா பூனையை பார்த்து குடிப்பது பாலை ஆட்டுவது வாலை கவிதை எழுதினேன் * பார்க்கும் தொழில்கள் அனைத்தையும் நானும் அப்படி ஆக வேண்டும் ஆசைப்பட்டது * தனக்கு பிடிக்காத இசை வகுப்பை பற்றி * அப்பா எழுதக் கற்றுக்கொண்டது,புத்தகங்கள் வாசிப்பு குறித்து * அப்பா முதல் முதல் மனம் புண்பட்டது எப்படி …? * முதல் பார்த்த சினிமா பற்றி….புலி வேட்டைக்கு போனது பற்றி…ஆசிரியையை அப்பா ஏமற்றியது பற்றி * அப்பாவின் பள்ளி விழா பற்றி நாற்காலி செய்தது பற்றி ..பாம்பைக் கொன்றதைப்பற்றியென * என்னால் கதை ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க முடியாதபோது,எனக்கு தெறிந்த வேறு அப்பாக்களிடமிருந்து ஒன்றை நான் கடன் வாங்குவேன். * எப்படியிருந்தாலும் ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்தானே.ஆகவே இந்தக் கதைகளில் எவையும் கற்பனை செய்யப்பட்டவை அல்ல என்பதைக் காண்பீர்கள்.இவை எல்லாமே சிறுவர்களுக்கு நேர்ந்தவைகளே. * எனக்கு நேர்ந்த எல்லாவிதமான வேடிக்கை நிகழ்ச்சிகளையும் நினைவுபடுத்த நான் முயன்றேன் * பேராசையுடனோ,தற்புகழ்ச்சியுடனோ தலைக்கனத்துடனோ நடப்பது நல்லதல்ல என்பதை எனது சிறுமி புரிந்துகொள்ள விரும்பினேன் * நான்கு வயதாக இருக்கும்போதே வாசிப்பதற்குக் கற்றுக் கொண்டார்.தனுது நாள் முழுவதையும் வாசிப்பதில் செலவிடுவதற்கு அவர் தயாராக இருந்தார் * அதிக புத்தக வாசிப்பின் வாயிலாக சிறுவனாகிய அப்பா தனது கண் பார்வையைக் கெடுத்துக்கொண்டார் ஆகவே அப்பா கண்ணாடி அணிய வேண்டிவந்தது. * அப்பா சிறுவனாக இருந்த போது அவரிடம் அடிக்கடி கேட்டப்பட்டது “நீ பெரியவனாகும்போது என்னவாக விரும்புகிறாய்…? * விவாதம் செய்கின்ற போதெல்லாம்,தான் சொல்வதே சரி என எப்போதும் சாதித்தார் அவர் யாரையும் கேலி பேச முடியும்,ஆனால் வேறு எவரும் இவரைக் கேலி செய்யக் கூடாது…! * கல்லூரியில் ஆங்கிலத்தையும் சரியாகப் படிக்கவில்லை.இப்போது அப்பாவுக்கு ஒரு அந்நிய மொழியும் தெரியாது.தனக்குத் தானே பழிவாங்கி கொண்டதாக இப்போது அவர் உணர்கிறார்.அவருக்கு விருப்பமான பல புத்தகங்களை அவை எழுதப்பட்ட மொழியில் அவரால் படிக்க முடியாது..! இன்னும் பல கதைகள் இருக்கிறது இந்த புத்தகத்தில்…இப்படியே இருந்தால் நீ உருப்புடமால்தான் போவ என்று திட்டுவாங்கியவர் பின்நாளில்…ரஸ்ய இலக்கியத்தில் முக்கிய புள்ளியாக திகழ்ந்தார். ஓரு தந்தையாக நான் எனது மகனுக்கு எனது சொந்த வாழ்க்கையில் இருந்து சொல்ல இத்தனை இருக்கிறாத என்பதை இந்த புத்தகம் எனக்கு நினைவுபடித்திருக்கிறது.இதில் ஓவ்வொரு தலைப்பையும் படித்த முடித்ததும் அதே தலைப்பில் நம் சிறுவயது நினைவுகள் கதை வடிவம் பெற்றுவிடும்…இந்த புத்தகத்தை வாசித்த அனைவரும் மறுநாளே…. “அப்பா சிறுவனாக இருந்தபோது” என்று கதை சொல்ல அல்லது கதை எழுத ஆரம்பித்திவிடுவர்கள் என்பது உறுதி….! ஜந்த வருட காத்திருப்புக்கு பிறகு நான் தந்தையானதை கொண்டாட மிகச்சரியான புத்தகமாக எனக்காகவே எழுதியதர்க்காக இதயம் நிறைந்த நன்றிகள் தோழர் அலெக்சாந்தர் ரஸ்கின் அதை இனிமையாக மொழிபெயர்த்த தோழர் நா.முகமது செரிபுக்கும். நன்றி கணேஷ் பாரி 27-11-2021
Ganesh Pari 07-01-2022 03:47 pm