என் அப்பா மிகவும் நல்லவர். எனக்காக எவ்வளவு செய்திருக்கிறார்” என்று ஒரு மகன் சொல்கிற நேரம், பெரும்பாலும் அவருடைய தந்தை இருக்கமாட்டார். வாழும் காலம் அருமை பெருமையை உணராத ஒரு உறவு என்றால், அது அப்பா-மகன் உறவுதான்.
அன்பை வெளிக்காட்ட கூச்சப்படும் அப்பாக்கள் ஒருபுறம், எவ்வளவுதான் அவர் நமக்காக குடும்பத்திற்காக உழைக்கிறார் என்பது அறிவுக்குத் தெரிந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளாத உணராத மகன்கள் மறுபுறம். இப்படிப்பட்ட வினோதமான அப்பா - மகன் உறவு, அதிகம் பொதுவெளியில் பேசப்படாத, எழுதப்படாத ஒன்று.
இட்லியாக இருங்கள், உறவுகள் மேம்பட, மனதோடு ஒரு சிட்டிங், உஷார் உள்ளே பார், NLP, எதிலும் பெரு வெற்றி, காதல் முதல் திருமணம் வரை போன்ற பல மனித உறவுகள் மற்றும் மனவோட்டங்கள் குறித்த வெற்றி புத்தகங்களை எழுதிய ஆசிரியர்
சோம. வள்ளியப்பனின் மற்றொரு முக்கியமான புத்தகம், ‘அப்பா மகன் நெருக்கமும் நெருடல்களும்.’
ஒரு தேர்ந்த வழக்கறிஞரைப் போல அப்பா மகன் ஆகிய இரு கட்சிக்காரர்களின் நியாயங்களையும் எடுத்துவைப்பதோடு, இரு சாராரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்ப்பையும் வைக்கிறார்
சோம. வள்ளியப்பன்.
Be the first to rate this book.