ஒரு நாட்டின் பொருளியலில் அடிப்படையானதும் தற்சார்புத் தன்மையைத் தீர்மானிப்பதும் வேளாண்மைத் துறைதான். இந்த வேளாண்மையின் அடிக்கட்டுமானம் விதைகள். இந்த விதைகளே வல்லரசுகளின் புதிய ஆயுதம் என்றால் வியப்பாகத் தோன்றும். ஆனால் உண்மை அதுதான்.
மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, நிலக்கடலை, அவரை போன்றவற்றைத் தந்தவை தென் அமெரிக்க நாடுகள். ஓட்சு, ரை, பார்லி, கோதுமை, மொச்சை இவற்றைத் தந்தவை தென்மேற்கு ஆசிய நாடுகள். சோளம், புன்செய் தவசங்கள் இவற்றைத் தந்தவை ஆப்பிரிக்க நாடுகள். வாழை, கரும்பு, சேனை இவற்றைத் தந்தவை தென் கிழக்கு ஆசிய நாடுகள். சோயா மொச்சையைத் தந்தது சீனா. அரிசியைத் தந்தது இந்தியா, மியான்மர் நாடுகள். இன்று இவையெல்லாம் ஏழை நாடுகளின் பட்டியலில் உள்ளன.
இனிமேல் வளரும் நாடுகளிலோ, ஏழை நாடுகளிலோ மரபினச் செல்வங்கள் இருக்காது. ஏனெனில் காடுகள் அழிந்து வருகின்றன. கடல்கள் மாசுபட்டு வருகின்றன. ஆய்வுக்கூட வசதியும் இருக்காது. எனவே எளிதாக ஏழை நாடுகளை வீழ்த்திவிடலாம்.இச்சூழலில் அணுகுண்டு ஆய்வைத் தடுத்துவிட்டால், வளரும் நாடுகளைப் படைவலு முறையிலும் வலுவிழக்கச் செய்துவிடலாம்.
எனவே, இனிமேல் நாடுபிடிக்க "அணுகுண்டு வேண்டாம், அவரை விதைகள் போதும்" என்று வல்லரசுகள் எண்ணுகின்றன. இதை வளரும் நாடுகள் புரிந்து கொண்டு தமது மரபினச் செல்வங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை வழி வேளாண்மை பரப்புதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இடைவிடாது களப்பணியில் இருந்து வருபவர். இருபதுக்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். பல மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். கட்டுரைகள் தினமணி, இந்து தமிழ் நாளிதழ், தமிழினி, தமிழர் கண்ணோட்டம் முதலிய பல இதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருபவர். சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது, சிறந்த வேளாண் அறிவியலாளர் விருது என்று பல விருதுகளைப் பெற்றவர். தமிழில் அலையாத்திக் காடுகள், மரபீனி முதலிய ஏராளமான கலைச் சொற்களை உருவாக்கியுங்ளளார். தமிழர்களுக்கு என்று தனியான சாதி சமயமற்ற சிந்தனை மரபு உண்டு என்றும் அதன் பெயர் திணையியல் என்றும் விளக்கி, தமிழர்களின் தொன்மையான சிந்தனை மரபான திணையியல் போட்பாட்டை மீட்டெடுத்தவர்.
Be the first to rate this book.