கலை, இலக்கியம், சமூகம் பற்றிய தன் அனுபவப் பிழிவுகளைத் தருகிறார் நாகராஜன். ஆயிரம் பூக்கள் மனதில் என்றொரு கட்டுரை. கல்லுாரியில் படிக்கின்ற காலத்திலேயே கவிதைகள் பிடிக்கும் எனக்கு. இரண்டு பக்க சிறுகதையில் சொல்ல முடியாத விஷயத்தை இரண்டே வரிகளில் நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லி, கைத்தட்டு வாங்க கவிதைக்கு தான் முடியும்... ஆயிரம் கவிதைகள் வாசித்தால், ஆறு கவிதைகள் தான் மனதில் நிற்கும். ஆனாலும் கவிதை இன்பம் நாடி, வாசிப்பை விட முடியவில்லை என்கிறார் கட்டுரையாளர்.
மாணவ சமுதாயம் ஒரு வழிகாட்டுதல் இல்லாமல் டாக்டர், இன்ஜினியர் என்று இரண்டு படிப்புகளை மட்டுமே மனதில் நினைத்து உழலுகிறது. ஜெர்னலிசம், விஷுவல் கம்யூனிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, லைப்ரரி சயின்ஸ், கெமிக்கல் இன்ஜினியரிங், மெரைன் இன்ஜினியரிங் என, படிப்பில் பல பிரிவுகள் நாட்டின் பல பகுதிகளில் பலவகை செலவுகளில் அத்தனை போட்டி இல்லாமல் கிடைக்கின்றன. கார் டிசைன் பண்ண, 25 பேர் ஆண்டுதோறும் படிக்கத் தேர்வாகின்றனர் என்று எழுதுகிறார். இன்று ஆறுகள் சிதைக்கப்படுகின்றன.
வற்றாத ஜீவ நதிகள் என்று போற்றப்பட்ட ஆறுகள், சுயநல வேட்டையால் மணல் திருட்டு, நீர்க் கொள்ளை, சாக்கடைக்கான வடிகால்கள் எனச் சிதைக்கப்படுவதையும் பதிவு செய்கிறார். ஏன் வேண்டும் இலக்கிய தாகம்? என்ற கட்டுரையில், கீழ்க்கண்ட இலக்கிய தாகத்தை சிபாரிசு செய்கிறார். வண்ணதாசன், வண்ண நிலவன், பாவண்ணன், அசோகமித்திரன், இமயம், பா.ஜெயப் பிரகாசம், பிரபஞ்சன், அராத்து, ஜி.ஆர்.சுரேந்திரநாத், பாலகுமாரன், தமயந்தி, வெண்ணிலா. இலக்கிய ஆர்வலர்களுக்கு இன்பமூட்டும் கட்டுரைகள்
Be the first to rate this book.