1926ஆம் வருட இலையுதிர் காலத்தின்போது, உலகின் முதல் பாசிச ஆட்சி இத்தாலியில் நான்கு ஆண்டுகளை முடித்திருந்தது. இத்தாலியக் கம்யூனிசக் கட்சிக்கு மட்டுமல்ல, மூன்றாவது அகிலத்திலும் கூட பாசிச ஆட்சியின் குணாம்சம் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. அது இத்தாலியின் எல்லைக்குள் நின்றுவிடக்கூடிய ஒன்றா? அல்லது எதிர்கால சர்வதேச நிகழ்ச்சிப் போக்கின் முன்னோட்டமா? அது புதுமையான சமூக, அரசியல் வடிவமா? பெருமுதலாளித்துவ ஆதிக்கத்தின் புதிய, மேலும் கொடூரமான மிருகத்தனமான கருவி என்ற பங்களிப்பில் இருக்கிறதா?
நாடு முழுவதிலும் பெருமளவிலான புதிய கைது படலம் துவக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் அந்தோனியோ கிராம்சி இருந்தார் அவருக்கு வயது 35. 1928இல் அவர் விசாரணைக்கு கட்படுத்தப் பட்டபோது, அரசாங்க வழக்கறிஞர் தனது வாதத்தின் முடிவில் நீதிபதியிடம் விடுத்த புகழ்மிக்க வேண்டுகோளாவது; “இந்த மூளை செயல்படுவதை இருபது ஆண்டுகளுக்கு நாம் நிறுத்த வேண்டும்”. ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பாகவே அவரது உடல்நிலை சீர் குலைந்தது; சிறையில் இறப்பதைவிட ஒரு மருத்துவமனைக் காவலில் அவர் இறப்பது சிறந்தது என்ற எண்ணத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். அதுவரை, அவரது உடல்நிலை அனுமதித்த அளவுக்கு அவரது மூளை செயல்படுவதை சிறை அதிகாரிகளால் நிறுத்த முடியவில்லை. சிறையில் நிகழ்ந்த அந்த மெதுவான மரணத்தின்போது விளைந்ததே 2,848 பக்க கையெழுத்துக் குறிப்பேடாகும். மருத்துவக் காவலில் இருந்தபோது அதனைக் கடத்த ஏற்பாடு செய்தார். அவரது மறைவிற்குப் பிறகு, அது இத்தாலியை விட்டு வெளியேறியது; அதிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவைதான் இந்தத் தொகுதி.
Be the first to rate this book.