அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில் கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன காற்று தெளிந்து, இலையற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள், தனிமையால் வாட்டமடைந்து, சலனமற்று, சக்தியிழந்து யாவும் விசித்திரமாய் இருக்கின்றன. ஆழமான நீலத் தொலைவுள் வெறுமையாய் இருக்கின்றன, வெளிறிய வானத்துடன் கலந்து குளிரில் கெட்டியான சேறு மூடிய நிலத்தின் மீது அவை சோர்வு தரும் குளிர் மூச்சு விடுகின்றன. ஆனால் கூதிர் காலத்து வெயிலைப் போல் கதாசிரியரது சிந்தையானது தடங்கள் பதிந்த பாதைகள் மீதும், கோணலான தெருக்கள் மீதும், சேறு படிந்த நெரிசலான வீடுகள் மீதும் திகமொளி வீசிக் காட்டுகிறது.
Be the first to rate this book.