நவீனத் தமிழக உருவாக்கத்தின் பின்புலத்தில் சமூகப் பண்பாட்டு மாற்றங்களை ஆராயும் கட்டுரைகள் இவை. தற்காலத்தைப் புரிந்துகொள்வதற்குக் கடந்தகாலத்தை விமர்சன நோக்கோடு பார்க்கவேண்டும் என்பதை வற்புறுத்தும் பார்வை இவற்றின் ஊடுசரடு. காப்பியும் புகையிலையும் தமிழ்ச் சமூகத்தில் எதிர்கொள்ளப்பட்ட முறை; திராவிட இயக்கத்தின் மொழிசார்ந்த அரசியல்; பாரதியின் எழுத்து வாழ்க்கை பற்றிய சமூகவியல் நோக்கு; கருத்துப் படங்கள், பகடி ஆகிய கலை வடிவங்கள் தமிழ் மரபில் பெறும் இடம் முதலானவை இந்நூலில் ஆராயப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரை என்றால் சாரமற்றிருக்கும் என்ற நினைப்பை முறியடித்து, சுவையும் விறுவிறுப்பும் மிக்க நடையில் இவை எழுதப்பட்டிருக்கின்றன. ஆய்வுலகத்தைத் தாண்டிப் பரவலான வாசக கவனத்தைப் பெற்ற நூலின் புதிய பதிப்பு இது
Be the first to rate this book.