அண்டார்டிகா என்றதும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எங்கும் உறைபனி. நடுங்க வைக்கும் கடுங்குளிர். ஆடி அசைந்து நடக்கும் பென்குயின்கள்தான் நினைவுக்கு வருகின்றன. இவைதவிரவும் இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் அங்கு இருக்கின்றன. வாசிக்கும்போது நீங்களே ஒரு ரவுண்ட் அண்டார்டிகாவுக்குப் போய்விட்டு வந்த உணர்வு உண்டாகிவிடும்!
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் அண்டார்டிகாவில் மனிதனின் முதல் காலடி பதிந்தது. புதிய கண்டத்தைக் கண்டுபிடிக்கும் ஆர்வமும், கடுமையான சாகசப் பயணமும், பலரது உயிர்த் தியாகமும் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை.
தொடர்ந்து பல நாள்கள் சூரியன் மறையாமல் இருந்துகொண்டே இருக்கும், அதே போல் சூரியன் உதிக்காமலும் இருக்கும். குறுகிய கோடை காலத்தில்தான் பனிப்பாறைகள் உருகி, தண்ணீரைப் பார்க்க முடியும். பெங்குயின்களும் சீல்களும் அல்பெட்ராஸ் பறவைகளும் ஆளும் அண்டார்டிகா ஓர் அற்புதமான புவியியல் அதிசயம்.
மனிதன் வாழ வசதியில்லாத இக்கண்டத்தில் ஆராய்ச்சிக்காக மட்டும் பல நாட்டு விஞ்ஞானிகள் அடிக்கடி சென்று தங்குகிறார்கள். அவர்களுடன் நீங்களும் ஒரு ஜில் பயணம் சென்று வரலாமே?
படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் வைக்கமாட்டீர்கள்! அவ்ளோ விறுவிறுப்பான புத்தகம் இது!
Be the first to rate this book.