அடர்ந்த கானகம் ஒன்றின் எண்ணற்ற வாசனைகளாலும் ஓசைகளாலும் நிரம்பிய மனுஷ்ய புத்திரனின் இந்த கவிதைகள், பெருமூச்சுகளின் மௌனப்புயல்கள், எங்கோ விழும் கண்ணீர் அருவிகளின் ஓசைகள், பெயர் தெரியாத பறவைகள்போலக் கண்ணில் பட்டு மறையும் விசித்திரமான உணர்ச்சிகள், இச்சைகளின் அச்சமூட்டும் புலித்தடங்கள், கானகத்தில் பற்றும் நெருப்பாகச் சமூக அவலங்களின் மீது படரும் கோபக்கனல் என நம் காலத்தின் மனித சாரத்தை இக்கவிதைகள் வெகு ஆழமாகத் தீண்டுகின்றன.
Be the first to rate this book.