காந்திஜியின் வீட்டுக்கு அநேக காமிராக்காரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய கஷ்டங்களுக்கிடையே காந்திஜியின் வாழ்க்கையில் அருமையான சில காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
மொத்தம் எடுக்கப்பட்ட சுமார் 5,00,000 அடி நீளமுள்ள படங்களிலிருந்து சுமார் 12,000 அடி நீளமுள்ள ஒரு தொடர்ச்சியான படம் தயாரித்து இருக்கிறோம். படத்தை இத்தகைய நீளத்திற்குக் கொண்டு வரச் சுமார் மூன்று வருஷங்கள் ஆயின. இவற்றைச் சேகரிக்க நான்கு கண்டங்களில் ஏறக்குறைய லட்சம் மைல் பிரயாணம் செய்திருக்கிறேன். உலகம் முழுமையிலும் கடந்த 30 வருஷங்களாகச் சற்றேறக் குறைய 100 காமிராக்காரர்கள் எடுத்த படங்களின் சேகரிப்பு அது. செய்திப்பட சம்பிரதாயத்தைக் கொண்டு ஒரு தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையை, அவரது வாழ்க்கையின் மூலமாகச் சித்தரிக்கும் ஒரு முழு நீளமுள்ள சரித்திரப் படம், முதன்முதலாகத் தயாரிக்கப்படுவது இதுதான் என்பது என் நம்பிக்கை. ஒரு மனிதரைப் பற்றிய முழு நீளப் படம் தயாரிக்க வேண்டுமென்றால் இந்தியாவில் காந்திஜியைத் தவிர வேறு எவரைப் பற்றித் தயாரிக்க முடியும்?
* ஏ.கே. செட்டியார்
Be the first to rate this book.