கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பம். அம்மா, அப்பா, ஆசிரியர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கும் குணம். படிப்பில் படு சுட்டி. இயல்பாகச் சென்றுகொண்டிருந்த கோன்ஸாவின் வாழ்க்கைத் திடீரென்று மாறியது. கோன்ஸா, தெரசாவாக மாறியது அப்போதுதான். ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் நோயாளிகளுக்கும் உதவுவதைத் தன் வாழ்நாளின் ஒரே குறிக்கோளாகக் கொண்டார் தெரசா. பிறப்பால் யூகோஸ்லாவியாவைச் சார்ந்தவர் என்றாலும், முழுநேர சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள இந்தியா வந்து சேர்ந்தார் அவர். இறைவன், பளபளக்கும் தேவாலயங்களில் இல்லை. சேரிகளிலும் குடிசைகளிலும் ஏழைகளின் ரூபத்தில் இருக்கிறார். அவர்களுக்குச் செய்யும் சேவை இறைவனுக்குச் செய்யும் சேவைக்கு ஒப்பானது. அன்னை தெரசாவின் வாழ்க்கை உணர்த்தும் செய்தி இதுதான்.
Be the first to rate this book.