• ஆனந்த விகடன் விருது - 2018 @ சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு
போலந்துக் கவிஞர் அன்னா ஸ்விர் பெண்ணியம், போர், உடல், வாதை, காமம், கொண்டாட்டம் என வாழ்வின் அர்த்தத்தையும் அர்த்தமின்மையும் கவிதைகளாக்குகிறார். தீவிரவாதமும் போர்ச்சூழலும் பெரும் சிக்கலாக உருவாகிக்கொண்டிருக்கும் தற்காலச் சூழலில், போரின் அபத்தங்களையும் கோரங்களையும் அவல நகைச்சுவைச் சித்திரங்களாக முன்வைக்கும் அன்னா ஸ்விரின் கவிதைகள் நமக்கு அவசியமானவை..
இரண்டாம் உலகப்போரில் வார்ஸா நகரமும் அதன் ஒரு மில்லியன் மக்களும் மொத்தமாக அழிந்துபோனதன் வலி மிகுந்த நினைவு, அவருடைய கவிதைகள் முழுக்க இழையோடி விம்முகின்றன. அழகியலும் பண்பாடு சார்ந்த நுண்ணுணர்வும் ஆழமான அரசியல் பார்வையும் கொண்ட சமயவேலின் ஆளுமை மொழிபெயர்ப்பில் வெளிப்படுகிறது..
- ஆனந்த விகடன்
Be the first to rate this book.