ஜன்னலைத் திறந்ததும் வருமே காற்று... அதைப்போல, ‘அஞ்சு செகண்ட் அட்டகாசம்!’ புத்தகத்தைப் படித்ததுமே, நான் எழுதும் பேனாவுக்கே தெரியாமல் வந்துவிழுந்த வார்த்தைகள்தான் இவை. மொத்தம் 100 கடுகுகள். ஒவ்வொரு கடுகுக்குள்ளும் ஒரு கடல் இருப்பதுதான் வியப்பு.
‘வள்ளுவனின் வகுப்பறை’யில் தொடங்கி, ‘தொடரும்...’ என முடிகிறது இந்தக் கடுகுகளின் வரிசை. வள்ளுவனின் எழுதுகோலுக்கு வார்த்தைகள் கைகோர்த்ததைப் போலவே, டாக்டர் சசித்ரா தாமோதரன் அவர்களின் பேனாவுக்கும் கட்டுப்பட்டு, கதைகள் கைகோர்த்து நிற்பதை ஒரு அதிசயமாகவே பார்க்கிறேன். எதைச் சொல்ல..? எதை விட..? புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் வெகு சாதரணமாகத் தொடங்கும் வார்த்தைகள், கடைசி வரியில் என்னைப் புரட்டிப்போட்டதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்...
அன்புடன்,
ராஜேஷ்குமார்
Be the first to rate this book.