1830 வருடத்தில் இலையுதிர்காலத்தில் பூஷ்கின். போல்தினோ கிராமத்தில் தங்கியிருந்த போது 'பெல்கின் கதைகள்' எழுதினார். இத்தொகுப்பில் உள்ள 'சவப்பெட்டி வியாபாரி' என்ற கதைதான் முதன்முதலாக எழுதப்பட்டது. அதை செப்டம்பர் 9ஆம் தேதியன்று எழுதியதாகக் குறித்திருக்கிறார். அடுத்து 'அஞ்சல் நிலைய அதிகாரி' என்ற கதையை செப்டம்பர் 14ஆம் தேதியன்று எழுதியிருக்கிறார். 'சீமாட்டியின் மாறுவேடம்' என்ற கதையை செப்டம்பர் 20 ஆம் தேதியிலும் 'கைக் துப்பாக்கி வேட்டு' என்ற கதையை அக்டோபர் 12, 14 தேதிகளிலும் 'பனிப் புயல்' என்ற கதையை அக்டோபர் 20ஆம் தேதியிலும் எழுதியிருக்கிறார் டிசம்பர் 9ஆம் தேதியன்று பூஷ்கின் பிலெட்னேவ் என்ற நண்பருக்கு எழுதிய கடிதத்தில் 'உரைநடையில் ஐந்து கதைகள்' எழுதியிருக்கும் தகவலை 'மிகவும் இரகசியமாகத் தெரிவிக்கிறார்.
Be the first to rate this book.