'இலக்கியத்துக்கு எதிரானவர்' என்று சித்திரிக்கப்பட்ட பெரியாரை நவீனக் கவிதைகளுக்குள் கொண்டு வர முடியுமா என்ற சவாலையேற்று எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. நவீனச் சிந்தனைகளை முன்வைத்து தமிழ்ச் சூழலில் பல உடைப்புகளை ஏற்படுத்திய பெரியாரை நவீன கவிதை வடிவத்துக்குள் கொண்டுவராமல் இருந்த இலக்கியத் தீண்டாமைக்கு எதிரான முயற்சி. இந்தியா முழுவதும் பெரியாரின் தேவை உணரப்படும் சூழலில் பெரியார் என்னும் ஆளுமையின் சாரத்தை இறக்கி எழுதப்பட்ட இந்தக் கவிதை நூலைப் படியுங்கள்: பரப்புங்கள்; உங்கள் குழந்தைகளுக்கு, நண்பர்களுக்கு, காதல் துணைக்கு, இல்ல விழாக்களில் பரிசளியுங்கள்.
4 கவிதையில் பெரியார்
பெரியார் இறந்து 50 வருடங்கள் ஆகியும் , பேசுப்பொருளாக இருப்பதற்க்கு ஒரே காரணம் ,அவர்தான். அவருடைய கருத்தகளை ஆதரிக்கலாம், மறுக்கலாம் ஆனால் அவரை ஒருப்போதும் மறக்கடிக்க முடியாது. இந்த கவிதை தொகுப்பு அவருடைய இன்னொரு வடிவம். படித்து இன்பூருங்கள்.
Abdul Rahman 14-03-2024 09:15 pm