சென்னையின் சில இடங்கள் வரலாற்றில் நிலைத்துவிட்ட இடங்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தி.நகர் எனப்படும் தியாகராயர் நகர். திராவிட இயக்கத்தின் முன்னோடி இயக்கமாகத் திகழ்ந்த நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சர்.பிட்டி தியாகராயர் பெயரைக் கொண்டுள்ள இடம் தி.நகர். அதனால் இது அரசியல் வரலாற்றோடு தொடர்பு கொண்ட இடமாகவும் திகழ்கிறது. கால் நூற்றாண்டுக் காலமாக சென்னை மாநகரின் பெரும்பாலான மக்கள் அதிகம் வந்துபோகும் இடமாக விளங்கிக்கொண்டிருக்கிறது தியாகராயர் நகர். ஸ்டிக்கர் பொட்டு முதல் விலை உயர்ந்த தங்க, வைர நகைகள் வரை எது வாங்கவேண்டும் என்றாலும், மக்களின் மனதில் முதலில் வந்து நிற்கும் இடம் தியாகராயர் நகர்தான். மக்கள் திரள் அதிகமாகக் காணப்படும் ரங்கநாதன் தெரு, பனகல் பூங்கா, ஜி.என்.செட்டி சாலை என தி.நகரின் பல்வேறு இடங்களைப் பற்றியும் தியாகராயர் நகரின் பழைய வரலாறு பற்றியும் விகடன் இணையதளத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வர்த்தக உலகமான தியாகராயர் நகரின் பழைய வரலாற்றை அறிந்துகொள்ள இந்த நூல் வழிவகுக்கிறது. வாருங்கள் தி.நகரின் வரலாற்றை அறிந்துகொள்வோம்!
Be the first to rate this book.