இலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்பது வடிவத்தில் மட்டும் நிகழ்வது அல்ல; உணர்வு நிலையில் ஏற்படுவது. கவிஞனின் ஆளுமையும் பார்வையும் அவனது கவிதையாக்கத்திலும் பிரதிபலிக்கும். கவிஞன் கையாளும் வடிவம் அவன் கருதும் மையப் பொருளையும் பாதிக்கும். அதற்குப் பொருந்தும் மிகச் சரியான உதாரணங்களில் ஒன்றாக ஞானக்கூத்தன் கவிதைகள் இருக்கின்றன.
வெளிவந்து ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பின்பும் ‘அன்று வேறு கிழமை’ சமகாலப் பொருத்தமுடைய கவிதைகளின் தொகுப்பாகவே படுகிறது. புதுப்புது அபத்தங்களைத் தரிசித்துக்கொண்டிருப்பதும் அதன் எதிர்வினையை இந்தக் கவிதைகளில் காண முடிவதும்தான் காரணமாக இருக்குமோ?
Be the first to rate this book.