கவிஞர்களினூடாகவே மொழி தன் நேற்றுடனும் இன்றுடனுமான உறவை நிறுவுகிறது; அவர்களினூடாகவே மொழி தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. சொல்லினூடாக கவிஞன் பெறுவது இருத்தலின் நிறைவு.
ஆம் ... இப்பெரும் பிரபஞ்சத்தின் அச்சாணிகளாகவும், சொல்லப்படாத சொற்களையும் சேர்த்து, மொழி தன்னை புத்துப்பிதுக்கொண்டே இருக்கிறது. உலகியல் கனவுகளோடுதான் உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறோம் ஒவ்வொருவரும் காலத்தை..!!
உள்ளங்கள் பின்னோக்கி செல்ல, பேதமேதுமற்ற அந்த பால்ய வெளிக்குள் திரிந்து கொண்டிருந்துவிட்டு மீண்டும் உலகியலுக்குத் திரும்பும்போது திடுக்கிடும் உளவியலை மொழிப்படுத்த முயன்றிருக்கிறேன்.
மிகை மிகையென விரைந்தோடும் மனிதத்தின் காலத்தினுடனான பந்தையக்களத்திலிருந்து சற்று விலகி நின்ற நோக்கில் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு.
- அனலோன்
Be the first to rate this book.