பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்குப் போட்டியாக விளங்கும் வங்கதேசத்திற்கு, மேம்பட்டுள்ள பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிலையை ஆய்வு செய்வதற்காக, சென்ற குழுவில் சுப்ர பாரதி மணியன் தனக்கேற்பட்ட வங்கதேச அனுபவங்களை இதில் பகிர்ந்துள்ளார்.
பின்னலாடை பற்றிய ஆய்வை விட பங்களாதேஷ் எவ்வெவ் வகைகளில் மிகவும் சரிந்து சீர்கேடு அடைந்துள்ளது என்பதை பெரும்பாலான கட்டுரைகளில் விவரித்துள்ளார். நில நடுக்கங்கள், வங்கதேச விடுதலைப் போர்க் குற்றவாளிகள், மோசமான தொழில் என்று அழைக்கப்படும், ‘கப்பல் உடைப்பு’ இப்படியாக பங்களாதேஷின் பிற நிலைமைகளும் இதில் அடங்கும்.
டாக்காவில் இலக்கியம் பற்றியும், கவி நஸ்ருல் இஸ்லாம், ‘லஜ்ஜா’ நாவல் மூலம் பெரும் அரசியல் விவாதத்தை உருவாக்கிய தஸ்லிமா நஸ்ரின் போன்ற இலக்கியவாதிகள் பற்றியும் எழுதியுள்ளார் நுாலாசிரியர். மொழிபெயர்ப்புக் கவிதைகள், டாக்கா நகரம் பற்றியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.
படிப்பதற்கு எளிய இலக்கிய நடையில் அமைந்துள்ள இந்நுாலில் பங்களாதேஷ் பற்றிய வரலாறும், அரசியலும் இழையோடி மெருகூட்டுகிறது
Be the first to rate this book.