ஆயிரமாயிரம் போர்ப்படைகளையும், முரட்டு இராணுவங்களையும் கண்டு துளியும் அஞ்சாமல் நெஞ்சுயர்த்தி நின்ற வீரத் தலைவர் நபிகள் நாயகம்(ஸல்), இறை அச்சத்தினால் கசிந்துருகிய கணங்கள் அனைத்தும் காவியங்கள்.
தம் பசிக்காக, தம் காயங்களுக்காகக் கண்ணீர் சிந்தாமல், தம் அன்புத் தோழர்களின் வலிகளைக் கண்டு பொங்கியெழுந்த பொழுதுகளை, அற்ப உலகின் தேவைகளுக்காகக் கலங்காமல் மறுமையில் மாபெரும் இறைவனின் திருமுன் நிற்கும் நேரத்தை நினைத்துக் குலுங்கியழுத கண்ணீர் கணங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்நூல்.
Be the first to rate this book.