நீங்கள் தயாராகவும், அதிர்ஷ்டத்துடனும் இருக்கும் போது உங்களை இந்தப் புத்தகம் தேடி வந்து அடைகிறது.
இந்த நாவலில் முக்கியமான கதாபாத்திரம் மாயா. அவள் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களில் கஷ்டப்படுகிறாள். சரியான நேரத்தில் அவள் ஒரு குருஜியைச் சந்திக்கிறாள். சூரிய ஒளியின் வெளிச்சம் அவள்மீது படத்தொடங்குகிறது. ஆனால் இந்தப் புத்தகம் மாயாவைப் பற்றியது அல்ல. இது உங்களைப் பற்றியும் உங்களின் பயணத்தைப் பற்றியதும் ஆகும். நீங்கள் விரும்பும் ஒரு சந்தோஷமான வாழ்க்கைக்கு ஓர் உத்வேக வழிகாட்டி இந்தப் புத்தகம். இதில் ஆன்மிகம், கற்பனை, கவிதை, தத்துவம், அன்றாட அனுபவங்களின் அடிப்படையில் அமைந்த தீர்வுகள் என்று உங்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கக்கூடிய கேள்விகளுக்கு விடைகளும் இருக்கின்றன.
பெண்கள் என்பவர்கள் பலவீனமானவர்களா? திருமணம், மனிதன், பணம் மற்றும் தாய்மை என்ற அனைத்தையும் புரியவைக்கும்.
வாழ்க்கையில் விவாகரத்து, மன அழுத்தம், மறுப்புக்கள் இப்படி எல்லாவற்றையும் எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுத்தரும்.
வாழ்க்கையில் எதிர்ப்படும் சவால்களையும் சிக்கல்களையும் கடந்து மேலேறி வெற்றியை அடைவது எப்படி.
இந்தப் புத்தகத்தை நீங்கள் கையில் வைத்திருக்கும்போது ஒரு கண்ணாடியை வைத்திருக்கிறீர்கள். ‘ஆனந்தத்துக்கு ஒரு மிஸ்ட் கால்’ உங்களை நீங்களே அறிந்துகொள்ள, மறுபடி புதுப்பித்துக்கொள்ள உதவும் புத்தகம்!
இந்தப் புத்தகம் மீண்டும், ஓர் அழகான மனிதருடனான உங்கள் காதல் உறவைப் புதுப்பித்துக்கொள்ள வைக்கும். அந்த அழகான மனிதர் யார்? அது நீங்கள்தான்.
Be the first to rate this book.