எப்போதும் கேட்கிற இசைதான். ஆயினும் சில கணங்களில் இஞ்சிகுடி சுப்ரமண்யமோ, பிஸ்மில்லா கானோ, ரவிஷங்கரோ, லால்குடியோ வாசிக்கும்போது திடீரென்று அது வரை கேட்டிராத ஒரு பிரயோகம் வந்து நனவா பிரமையாவென திகைக்கவைத்து சட்டென நம்மை கவ்விவிடுகிறது. அது வாத்தியத்திலில்லை ராகத்தில் இல்லை வித்துவத்திலும் இல்லை. வாசிக்கிறவன் எப்போதோ அடைந்த உணர்ச்சியும் கற்பனையும் எதோ ஒரு கணத்தில் சேர்ந்து முயங்குகிறபோது தோன்றுகிற ஒரு உணர்வு மின்னல் அது. எதோவொரு விதமாய் அந்த ஒலிக்கீற்று தீண்டுகையில் விதிர்க்கிறதே, அது பாவண்ணன் கதைகளை வாசிக்கும்போதும் ஏற்படுகிறது.
- ரவிசுப்பிரமணியன்
Be the first to rate this book.