அனைவருக்கும் இஸ்லாம் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஆன்மிகமான, அறிவுப்பூர்வமான, அரசியலில் நீதி நிறைந்த, சமத்துவச் சமூகத்திற்குரிய கல்வியாகும். இது இறைவன் குறித்த தெளிவான புரிதலிலிருந்து தொடங்கி, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நுழைந்து சமாதானத்தை வழங்குகிறது. இஸ்லாம் நம் அனைவரையும் படைத்த இறைவனின் சமயமாகும். அதாவது, அந்த ஒருவனால் இந்த உலகின் ஒவ்வொரு மனிதருக்கும் வழங்கப்பட்ட சமயமாகும். இதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் முஸ்லிம்களாக அறியப்படுகிறார்கள். ஆனால், முஸ்லிம் தாய்தந்தைக்குப் பிறந்தவர்களுக்கு மட்டுமே இஸ்லாம் வழங்கப்பட்டதாக நினைத்துவிடக் கூடாது. இறைவன் அனைவருக்கும் இறைவன் என்பதுபோல இஸ்லாமும் அனைவருக்குமானதுதான். இங்குக் கீழ்ப்படிவோர், கீழ்ப்படியாதோர் என்பதே முஸ்லிமையும் முஸ்லிம் அல்லாதவரையும் பிரித்துக்காட்டுகின்றது. முஸ்லிம் என்றால் கீழ்ப்படிந்தவர் எனப் பொருள். காஃபிர் என்றால் மறுத்துவிட்டவர் எனப் பொருள். உலக நியதிப்படி ஒருவருக்கு இறைவன் இஸ்லாமை மறுத்துவிடுகின்ற சுதந்திரத்தைக் கொடுத்திருந்தாலும், அவனுடைய நியதிப்படி அனைவரையும் அதன்பக்கம் அழைக்கின்ற விருப்பத்தையே வெளிப்படுத்தியுள்ளான்.
Be the first to rate this book.