‘‘எனக்கு உண்மையென்று பட்டதை, எனக்கு நியாயம் என்று தோன்றியதை மறைத்தோ, திரித்தோ கூற என்னால் முடிவதில்லை. சிறுவயதிலிருந்தே இந்தத் துணிச்சல் குணம் என்னோடு வளர்ந்து வந்திருக்கிறது’’ - இது ஜெயலலிதா தன்னைப் பற்றி தானே ஒருமுறை சொன்னது. இந்தக் குணத்தை அவர் தன் இறுதிக் காலம் வரை மாற்றிக் கொண்டதில்லை என்பதை அரசியல் நோக்கர்களும் அவருக்கு நெருக்கமானவர்களும் அறிந்ததுதான். ஆண் ஆதிக்கம் நிறைந்திருக்கும் திரைத் துறையிலும் அரசியலிலும் அவர் அசைக்க முடியாத ஓர் ஆளுமையாக திகழ்ந்ததற்கு, அவரின் தன்னம்பிக்கையும் இந்தத் துணிச்சலும்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்!
பள்ளி வயதிலேயே தந்தையை இழந்த நிலை, அம்மா இருந்தும் அருகில் இருந்து அரவணைக்க முடியாத சூழ்நிலை... இப்படி சிறுவயதிலேயே தனிமையில் தன் காலத்தைக் கடந்த ஜெயலலிதா, ஒரு சராசரி பெண்ணுக்கு இருக்கும் உறவுகள் சூழ்ந்த வாழ்க்கையை விரும்பியிருப்பார். ஆனால், காலம் அந்தச் சூழலை அவருக்குத் உருவாக்கித் தரவில்லை. பலரும் அறிந்திராத ஜெயலலிதா வாழ்க்கையின் ஆரம்ப கால நிகழ்வுகள், அரசியல் பிரவேசத்தின்போது அவர் எதிர்கொண்ட சவால்கள், எதிர்ப்புகள்.... என அனைத்து சம்பவங்களையும் விரிவாக விளக்குகிறது இந்த நூல்! அவள் விகடனில் ‘அம்மாவின் கதை’ என்ற பெயரில் தொடராக வெளிவந்த ஜெயலலிதாவின் வாழ்க்கைக் குறிப்பு கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இப்போது உங்கள் கையில். இனி அம்மாவின் கதையைக் கேளுங்கள்...
Be the first to rate this book.