தொல்காப்பியத்திற்குப் பிறகு கிடைத்த யாப்பருங்கலக்காரிகை மிக எளிமையாக யாப்பிலக்கணத்தை விளக்கிடும் சிறந்த நூல். இந்நூவின் சிறப்பிற்கு முக்கியக் காரணம் குணசாகரரின் விருத்தி உரை ஆகும். அவ்வுரையைத் தழுவி காலமாற்றத்திற்கேற்ப உரை மேற்கோள்களுடன் தற்காலக் கவிஞர்களின் கவிதைகளை மேற்கோள்காட்டி நூலாசிரியர் விளக்கியிருப்பது நூலிற்குச் சிறப்புச் சேர்க்கிறது. மாணவர்கள் எளிதில் பொருள் உணர்ந்து கொள்ளும்படியாக விளக்க உரையினைத் தந்திருக்கிறார். யாப்புப் பயிற்சிக்கு இந்நூல் கூடுதல் உரமளிக்கும் என்பதில் ஐயமில்லை.
Be the first to rate this book.