அரசியல் சாணக்கியத் தன்மையும் பேரரசுகளின் உள்நோக்கங்கள், செயல்பாடுகள் பற்றிய நுட்பங்களும் நிரம்பிய ஆங்கில மொழிச் சித்திரக்கதையை இன்னொரு மொழிக்குப் பெயர்த்தல் என்பது மிகவும் கவனம் தேவைப்படும் ஓர் அரிய பணியாகும். மொழிபெயர்ப்பின் செம்மை என்பதைத் தாண்டி இயங்கும் தன்மை கொண்ட சித்திரப் படங்களின் ஒழுங்கை உணர்ந்து, உரையாடல்கள், கதை கூறல் ஆகியவற்றின் நுட்பங்களோடு பயணித்து மொழிபெயர்க்கத் தனித் திறமையும் கவன ஒருங்கு குவிப்பும் தேவைப்படுகின்றன. அவ்வகையில், இச்சித்திரக்கதை வரலாற்று நூலை மிக நேர்த்தியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்தளித்துள்ளார் இரா. செந்தில். அவருடைய மொழிபெயர்ப்புக்காகவும் அதற்கு அவர் எடுத்துக்கொண்ட அர்ப்பணிப்புக்காகவும் அவரைத் தனியே பாராட்டலாம்.
Be the first to rate this book.