அந்தந்த நாடு, அவரவர் அரசியல் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் மொத்த உலகையும் ஆட்டிப்படைப்பது அமெரிக்கா.
அமெரிக்காவின் அரசியல் என்பது அந்த நாட்டின் எல்லைகளுடன் முடிவதில்லை. அதன் ராட்சசக் கரங்கள் நீளாத தூரமில்லை. அமெரிக்காவைப் புரிந்துகொள்வது என்பது ஒரு வகையில் உலக அரசியலையே புரிந்து உள்வாங்குவதற்குச் சமம்.
பத்மா அர்விந்தின் இந்தக் கட்டுரைகள் அமெரிக்க அரசு கடந்த ஆண்டுகளில் மேற்கொண்ட அதிமுக்கியமான நடவடிக்கைகளின் அடிப்படைகளை ஆராய்கிறது. அதன்மூலம், உலக அளவில் ஏற்பட்ட விளைவுகளும் அமெரிக்காவுக்குள் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களும் துலக்கம் பெறுகின்றன.
மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
Be the first to rate this book.