‘அமெரிக்க மக்கள் வரலாறு’ பள்ளி - கல்லூரி பாடபுத்தகங்களில் காணும் வழக்கமான வரலாறு அல்ல. கொலைக்காரர்களை, கொள்ளையர்களை, ஆக்கிரமிப்பாளர்களை கொலம்பஸ்களை கதாநாயகர்களாக போற்றி கொண்டாடும் வரலாற்று நூல் அல்ல. இந்த நூல் மக்கள் இயக்கங்களை போற்றி பதிவு செய்கிறது. மரபான வரலாறுகளில் பதியப்படாத பல எதிர்ப்பியக்கங்களைத் தேடித் தேடி பதிவு செய்கிறது. இந்த வரலாற்று பதிவுகள் பெரும் வெற்றியாளர்களின் கோணத்திலிருந்து அல்ல... தோல்வியடைந்த தருணங்களின் உணர்வுகளை பதிவு செய்கிறது. பதியப்படாமல் விடுபட்ட களப்போராளிகளின் கூற்றுகளை, சாதாரண மக்களின் கூற்றுகளை பதிவு செய்கிறது. மக்கள் இயக்கங்கள் சார்ந்த உண்மைகளை பதிவு செய்கிறது. ஆகவே இந்த நூல் வித்தியாசமான வாசிப்பு சுவையை கொண்டிருக்கிறது. அதே வேளையில் புறக்கணிக்க முடியாத சான்றாதாரங்களை கொண்டிருக்கிறது.
Be the first to rate this book.