இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நாட்டில் இரு அணி சேர்க்கைகளை உருவாக்கியிருக்கிறது. இதை ஆதரிக்கும் ஒரு தரப்பினர் இதனை இந்திய வளர்ச்சியைவிட்டுப் பிரிக்க முடியாது என்கிறார்கள். எதிர்ப்பவர்கள் இந்த உடன்பாடு செயல்படத் தொடங்கினால் இந்தியா இதுவரை கட்டிகாத்து வந்த வெளியுறவுக்கொள்கை கடுமையாகப் பாதிப்படையும், நமது ராணுவக் கொள்கையும் பலவீனமடையும், அதைவிட இந்த உடன்பாட்டால் அணுசக்தி தொழில்நுட்பத்துறையில், நமது சுயசார்புக் கொள்கை மூலம் இதுவரை நாம் அடைந்துள்ள முன்னேற்றம் கூட உண்மையில் பாதிப்படையும் என்று சரியாக வாதிடுவார்கள். குறிப்பாக, நமது சொந்த முயற்சியில் வளர்த்துக்கொண்ட நமது அணுசக்தித் தொழில்நுட்பம் உலக அளவில் நமது நாட்டிற்கு பெரும் மதிப்பையும் கவுரவத்தையும் பெற்றுத் தந்துள்ளது. இந்த கவுரவத்தையும் இழந்து விட்டுத்தான் இந்தியா-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டை அமல்படுத்தப் போகிறோமா?
Be the first to rate this book.