இந்தியாவில் வாழும் படித்தவர்களைக் கவர்ந்து இழுக்கும் நாடு அமெரிக்கா. அதைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள், பயணக் கட்டுரைகள், அவற்றில் பல அமெரிக்காவைப் பற்றிய கற்பனையை வளர்ப்பவை. இந்த நூலோ அமெரிக்காவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து அமெரிக்கர்களையும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையையும் கூர்ந்து கவனித்து உள்ளதை உள்ளபடி எழுதப்பட்டது.
தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியொன்றில் பிறந்த நாகேஸ்வரி, பெரிய மொழி ஆளுமையான அண்ணாமலையின் மனைவி. இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்றவர். தன் குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் என்று அவர் காலத்துப் பெண்கள் பலரையும்போல ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்துக்கொண்டிருக்க வேண்டியவர். தன்னுடைய 60-வது வயதுக்குப் பிறகு, திடீரென எழுதத் தொடங்கினார்.
'அமெரிக்காவில் முதல் வேலை', 'அமெரிக்க அனுபவங்கள்', 'அமெரிக்காவின் மறுபக்கம்' என்று அமெரிக்கா பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் அமெரிக்க வாழ்வு, கலாச்சாரம் சம்பந்தமான தமிழின் முக்கியமான வரவுகளாக அமைந்தன. தொடர்ந்து, 'ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைகள்', 'பாலஸ்தீன இஸ்ரேல் போர்', 'போப் பிரான்சிஸ்' ஆகிய புத்தகங்களை எழுதினார். அமெரிக்கா தொடர்பாக இங்கு நிலவும் பொது பிம்பத்தை உடைப்பவை நாகேஸ்வரியின் புத்தகங்கள்.
Be the first to rate this book.