ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் இன்று பெரும் பணக்கார, வல்லரசு நாடு. எப்படி
அப்படி வளர முடிந்தது. அமெரிக்காவைத் தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்கா எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது . அங்கு எப்படி மக்கள் குடியேறினார்கள். உள்நாட்டுப்போர், நிறவெறி, கறுப்பின மக்கள் நடத்திய போராட்டம் என்று எத்தனையோ மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும் இன்று அறிவியல், தொழில் நுட்பம் , விண்வெளி ஆய்வு, ராணுவம், விவசாயம், கல்வி, பொருளாதாரம் எல்லா அம்சங்களிலும் நம்பர் ஒன்னாகத் திகழ்கிறது அமெரிக்கா.நயாகரா நீர்வீழ்ச்சி , டிஸ்னிலேண்ட், ஹாலிவுட், சுதந்திரதேவி சிலை என சுற்றிப் பார்க்கும் இடங்களுக்கும் பஞ்சமில்லை. பல நாடுகளில் இருந்தும் அமெரிக்காவில் வேலை செய்ய மக்கள் திரண்டு வருகிறார்கள். யார் கண்டது, நாளை நீங்களே படித்து முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் போகலாம். அதற்குமுன் அந்த நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா!!
Be the first to rate this book.