சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி, கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து 'கழிவிரக்கம் காணாது. குடலிறக்கம் போதாது' - என்று விமர்சனத்துண்டுகளை எழுதித்தந்து மருந்துக்கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். 'ஆழ்மனதில் அலைக்கழியுங்கள். மேல் முடியை கலைத்துவிடுங்கள்' - என்று கதையெழுதியவர்களுக்கு விபூதி அடிக்கிறார்கள். கதைகள் பரிசோதனைக்குழாய் தவளைகள் போல விழிபிதுங்கிவிடுகின்றன. கதைகள் எனப்படுபவை பெரும்பாலும் தீவிர இலக்கியத்தின் வழியாக செயற்கையாக கட்டப்படுகின்றன. ஆனால், "அமீலா" மிகச்சுதந்திரமாக பதிவுசெய்யப்பட்ட கதைகளின் தொகுதி. காட்டுத்தீயினால் எழுந்தோடிய கங்காருக்கூட்டத்தைப்போல என்னுள் விழுந்து சிறு சிறு பொறிகள் ஏற்படுத்திய எழுத்தின் இயற்கையான இடப்பெயர்வுகள்தான் இந்தத்தொகுதியில் கதைகளாக வெளிவந்திருக்கின்றன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
- ப. தெய்வீகன்
Be the first to rate this book.