‘அம்பேத்கரின் பெண்ணியம்’ என்னும் இத் தொகுப்பை ஓர் ஆய்வேடாக தந்துள்ளார் பா. பிரபாகரன். அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளும் கருத்துக்களும் செயல்களும் எங்கெல்லாம் உள்ளன என்று ஒரு தேடலுடன் திரட்டித் தந்துள்ளார். மேற்கோள் பலவற்றையும் எடுத்துக் காட்டியுள்ளார். அறிஞர்கள் பலரின் கூற்றுக்களையும் ஒப்பிட்டுள்ளார். இத்தொகுப்பு மூலம் இரண்டு கருத்துக்களை முன்வைக்கிறார். ஒன்று அம்பேத்கர் பெண்ணியம் குறித்து பேசவில்லை என்பதை மறுத்து அம்பேத்கர் ஒரு பெண்ணியவாதியே என்று உறுதிப் படுத்தியுள்ளார். இரண்டாவது அம்பேத்கரின் பெண்ணியம் தொடர்பான முயற்சி, எண்ணம், இலக்கு எல்லாம் இன்று நடைமுறைப்படுத்தப்படாமல் பயனற்று உள்ளது என்று வருந்தியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டதுடன் அவர் கருத்துக்களுக்கு செயல் வடிவம் தரவேண்டும் என்று கோரியுள்ளார். அம்பேத்கரின் வழியில் நின்று அவரின் பெண்ணியச் சிந்தனைகளை வழிமொழிந்துள்ளார் என்றே கூற வேண்டும். இன்று பெண்ணியம் பேசுபவர்களும் அம்பேத்கரைப் பின்பற்ற வேண்டும் என்கிறார். பெண்ணியம் பேசிய அம்பேத்கரைப் போற்றியுள்ளார், பெருமைப்படுத்தியுள்ளார் பா. பிரபாகரன்.
Be the first to rate this book.