புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாகப் பிறந்தார் தன்னை ஒரு சாதாரன மனிதனாகவே எண்ணினார் தன்னுடைய கொள்கைகளையும் ஒரு சாதாரன மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையாகவே மீறியவராக ஒருபோதும் சித்தரித்துக் கொண்டதில்லை. தனக்கு இயற்கையை மீறிய ஆற்றல் இருப்பதாகவும் அவர் சொன்னதில்லை. தன்னிடம் இயறகையை மீறிய ஆற்றல் இருப்பதாக நிரூபிக்க ,அவர் அதிசயங்களை எதையும் நிகழ்த்தியதுமில்லை. புத்தர் மார்க்கப் பாதைக்கும் மோடசப் பாதைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக்கினார்.
Be the first to rate this book.