பொதுவாக அரசியல் கட்டுரைகளுக்கு அற்பாயுள். ஆனால் அந்தப் பண்பில் சிக்காது இத்தொகுப்பின் கட்டுரைகள் தனித்து நிற்கின்றன. இவற்றில் அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் தொடங்கி நரேந்திர மோடி, கமல் ஹாசன் வரையில் தலைவர்களின் அரசியல் பேசப்பட்டிருக்கிறது; அசோகமித்திரன், ஜெயமோகன், ஜோ டி க்ரூஸ், ஞாநி, பிஏ கிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்களின், இளையராஜா என்ற கலைஞனின் அரசியல் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் வழமையினின்று விலகியவை; காலாதீதம் அற்றவை. எதிர்ப்பே பிரதானம் எனினும் எதிர்மறை இருட்டைப் பூசாமல் நம்பிக்கையின் வெளிச்சத்தைத் தரித்து நிற்பவை. இதன் மற்றுமொரு சிறப்பு நெடிய கட்டுரைகள் கூட சுவாரஸ்யம் குன்றாமல் செறிவாக விஷயதானம் செய்கின்றன!
Be the first to rate this book.