‘தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விப் பிரச்சினைகள்’ பற்றி ஆராய்ந்த அண்ணல் அம்பேத்கர், தனது ஆய்வின் இறுதியில் மூன்று முக்கியமான முடிவுகளை முன்மொழிகிறார். பொதுக்கல்வித் துறையிலும், சட்டத்துறையிலும் கல்வி திருப்திகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானம், பொறியியலில் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. வெளிநாடுகளின் பல்கலைக்கழகங்களில் உயர்தரக் கல்வி கற்பதென்பது எட்டாக்கனியாக உள்ளது.“விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் உயர்தரக் கல்வி கற்பதுதான் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவும்; (ஆனால்) சர்க்காரின் உதவியில்லாமல் இத்துறைகளில் உயர்தரக் கல்வியின் கதவுகள் இவர்களுக்கு ஒரு போதும் திறந்திருக்க மாட்டா...’’ என்கிறார் அம்பேத்கர்.
Be the first to rate this book.