தெருவில் நடக்கத் தொடங்கியபோது அறிமுகமான தீண்டாமைக் கொடுமை பள்ளிக் கூடத்துக்கு வந்தது. பணியாற்றும் இடத்தையும் ஆக்கிரமித்தது. செல்லுமிடமெல்லாம் வந்து தீண்டியது.
அவமானம். புறக்கணிப்பு. அவலம். எல்லாவற்றையும் மென்று விழுங்கினார் அம்பேத்கர். அவற்றைத் தன்னுடைய வளர்ச்சிக்கான உரமாகவும் மாற்றினார். நோக்கம் ஒன்றுதான். தாழ்த்தப்பட்ட மக்கள் சுதந்தரமாகப் பேச வேண்டும். எழுத வேண்டும். செயல்பட வேண்டும். முக்கியமாக சுவாசிக்க வேண்டும். இதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார்.
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவே செலவிட்ட போராளியின் தியாக வாழ்க்கை.
Be the first to rate this book.