வியட்நாம் புரட்சியாளர் ஹோசிமின் நூல்களை செஞ்சோலை பதிப்பகம் சார்பாக தொடர்ந்து கொண்டு வருகிறோம் அந்த வரிசையில் வியட்நாம் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுவின் கோட்பாட்டு அமைப்பிதழ் ஹாக் டேப்பில் (ஆய்வு) செப்டம்பர் 19463 இல் வெளிவந்த Peace or violence என்னும் இந்நூல் அமைதி வழி அல்லது வன்முறை என்கிற பெயரில் செஞ்சோலைப் பதிப்பகம் சார்பாக வெளியிடப்படுகிறது.
சமூக உற்பத்தியில் ஈடுபடும் பாட்டாளிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களும் வறுமையில் வாடும் போது முதலாளிகளும் சுரண்டல்காரர்களும் ஆளும் வர்க்கப்பிரிவினரும் செல்வத்தில் ஊறித் திளைக்கின்றனர். இந்த வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பதையே கம்யூனிஸ்டுகள் புரட்சி என்கிறார்கள்.
சுரண்டும் தன்மை கொண்ட முதலாளித்துவச் சமூக அமைப்பைப் பாதுகாப்பதற்காக ராணுவம் உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைக் கருவிகளும் கொண்ட அரசை எதிர்த்துப் போராடுவது அகிம்சை வழியில் சாத்தியமே என்ற கருத்தியல் இன்று பரவிக் கொண்டிருக்கும் நிலையில் பாட்டாளிகளின் போராட்டம் எந்த வழியில் என்பதை இந்த நூல் துல்லியமாக விளக்குகிறது.
உலகம் முழுக்க வலதுசாரிகள் ஆதிக்கம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Be the first to rate this book.