அறுபது ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த அசோகமித்திரன் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில் எழுதிய கதைகள் இவை. தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரனின் படைப்பாற்றலும் அவரது படைப்புகளின் சிறப்புக் கூறுகளும் கடைசி மூச்சு வரையிலும் அவரிடம் இருந்ததை உறுதிப்படுத்தும் கதைகள். எளிய மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், இயல்பான உணர்வுகள், இவற்றினிடையே நிகழும் ஊடாட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வாழ்வின் ஆதார ஸ்ருதியைத் தொட்டுக் காட்டும் கதைகள். வாழ்க்கை நிகழ்வுகளின் பல்வேறு சாத்தியக்கூறுகளே என் கதைகள் என்று அசோகமித்திரன் கூறியிருக்கிறார். நிகழ்வுகளின் மாறுபட்ட சாத்தியக்கூறுகளினூடே மாறாத வாழ்வின் அடிப்படைகள் குறித்து இக்கதைகள் பேசுகின்றன. அசோகமித்திரனின் தொடக்ககாலக் கதைகள் இளம் எழுத்தாளருக்கான சலுகை கோராமல் தம் பலத்தில் நின்றன. அவருடைய கடைசிக் கதைகளும் அந்திம காலக் கதைகளுக்கான சலுகை எதுவும் தேவைப்படாமல் படைப்பாற்றலோடு நிற்கின்றன.
- அரவிந்தன்
Be the first to rate this book.