வளரிளம்பருவத்தில் ஏராளமான கேள்விகள் தோன்றும். அதுவரை பார்த்த சமூகம் இப்போது வேறொன்றாகத் தெரியும். புரியாத பலவிஷயங்கள் புரியத் தொடங்கும். எளிமையாக தெரிந்த பல விஷயங்கள் சிக்கலாகத் தெரியும். ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகள் ஊற்றென பொங்கும் பருவமான வளரிளம் பருவத்தினருக்கான புனைவு இலக்கியம் தமிழில் மிகவும் குறைவு. அந்தப்பருவத்தினரின் சமூக, இலக்கியத் தாகத்தை மனதில் கொண்டு எழுதப்பட்டிருக்கிற நாவல். பழங்காலக்கதையான அலாவுதீனும் அற்புதவிளக்கும் ஜீனி பூதமும் இப்போது சமகாலத்தில் அதாவது 2020 ஆம் ஆண்டு நமது ஊருக்கு வருகிறார்கள். அவர்கள் செய்கிற சாகசங்களை அதீதப்புனைவின் வழியே சித்தரித்திருக்கிற நாவலான அலாவுதீனின் சாகசங்கள் சிறார் இலக்கியத்தில் புதிய வகைமையை உருவாக்கும் மிகச்சிறந்த முயற்சி.
Be the first to rate this book.