அல் குர்ஆன் பல வகையில் ஆராயப் பட்டுள்ளது. அதன் மொழியையும் இலக்கிய உத்திகளையும் சிலர் ஆராய்ந்தனர். அது விளக்கும் வரலாற்று நிகழ்வுகளை இன்னொரு சாரார் ஆராய்ந்தனர். அது சுட்டிக்காட்டிய விஞ்ஞான உண்மைகளில் வேறொரு சாரார் ஈடுபாடு காட்டினர்.
ஆனால், அல் குர்ஆனின் அடிப்படை அதன் வழிகாட்டலாகும். அந்தப் பின்னணியிலிருந்து தொடுக்கப் பட்டதே இங்கு தரப்படும் வசனங்களாகும். வாழ்வின் பல்வேறு பகுதிகள் பற்றிய அல் குர்ஆனின் வழி காட்டல்கள் இங்கே தரப்படுகின்றன. வாசகர்கள் இந்த முயற்சியை ஏற்று அங்கீகரிப்பார்களாக.
உள்ளடக்கம்:
இறை நிராகரிப்பை அடிப்படையாகக் கொண்ட தனிமனிதர்களினதும், சமூகங்களினதும் முடிவு. (ஸூரா அந்நூர் 24:39)
மனிதன் சுமந்த மகத்தான பொறுப்பு. (ஸூரா அல் அஹ்ஸாப் 33:72,73)
செல்வப் பங்கீடு.(ஸூரா அல் ஹஷ்ர் 59:7)
வெற்றி இஸ்லாத்துக்கே! (ஸூரா அல் ஃபத்ஹ் 28, 29)
தக்வாவுக்கான பரீட்சை. (ஸூரா அல் ஹுஜுராத் 49:1-3)
செல்வம் உரிமையும் பராமரிப்பும். (ஸூரா அந் நிஸா 4:5)
நீங்கள் இஸ்லாத்தின்பால் அழைப்பவரா? (ஸூரா அந்நஹ்ல் 16:125)
சிருஷ்டியும் சிருஷ்டிகர்த்தாவும். (ஸூரா அல் பகரா 2:116 – 117)
வாழ்க்கையைக் கூறு போட முடியாது. (ஸூரா அல் மாஊன் 107:1–7)
கண்ணிருந்தும் என்ன பயன்? (ஸூரா அல் பகரா 2:17-20)
உலகம் ஒரு காட்சிசாலை. (தாரியாத் : 15 – 21)
தலைமைத்துவப் பொறுப்பேற்கும் சமூகத்தின் பண்புகள். (ஸூரா அஷ்ஷூரா 42:36-39)
நிற வேறுபாடுகள். (ஸூரா ஃபாதிர் 35:27,28)
சமூகங்களின் அழிவு. (ஸூரா அல் இஸ்ராஃ 17:16-18)
உலகக் கவர்ச்சிகளுக்கும் மனிதப் பலவீனங்களுக்குமிடையே தஃவாப் பயணம். (ஸூரா தஃகாபுன் 64:15-18)
இறை தூது உத்தரவுகளும் உபதேசங்களும். (ஸூரா அந்நஹ்ல் 16:89,90)
ஜிஹாதும் இஜ்திஹாதும். (ஸூரா அல் ஹதீத் 57:25)
வாழ்வு – ஒரு செயல் முறைப் பரீட்சை. (ஸூரா அல் முல்க் 67:2,3)
உங்களைச் சோதிப்பதற்காக சிலரை விடச் சிலரைத் தரத்தில் உயர்த்தினான்! (ஸூரா அல் அன்ஆம் 6:165)
நிலைத்து நிற்கும் நற்செயல்கள்.(ஸூரா அல் கஹ்ப் 18:45,46)
அல்லாஹ்வுக்குச் சந்ததி கற்பித்தல் அனைத்து வழிகேடுகளுக்கும் அடிப்படை.(ஸூரா அல் தவ்பா 09:30)
Be the first to rate this book.