அல்குர்ஆன் எமது உயிர். அதன் ஒளி எம் மீது படாவிட்டால் எமக்கு வாழ்வில்லை.
"மனிதம்" என்பதற்கு அர்த்தமில்லை. மனிதம் இறந்து மனித உடம்பில் மிருகமே அப்போது குடிகொள்ளும்.
"அவ்வாறே எமது கட்டளைகளின் ஒன்றான உயிரை உமக்கு நாம் வஹியாக அறிவித்தோம்" (ஸூரா ஷூரா 42-52)
அல்குர்ஆன் முஸ்லிமின் கொள்கை நூல், சட்ட நூல், அவனது வாழ்க்கையின் யாப்பு அது.
அது மனித வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய புரட்சி நூல். ஓர் உன்னதமான நாகரீகத்தைக் கட்டியெழுப்பிய உயர்ந்த நூல்.
குறிப்பிட்டதொரு காலப் பிரிவில் அது இறங்கிய போதிலும் காலத்தைக் கடந்த நூல் அது. காலத்திற்கு அப்பாற்பட்ட அந்த நூலைப் பெறும் ஒரு காலப் பாத்திரமாக மட்டுமே அக்காலப் பிரிவு அமைந்தது.
எனவே மனிதன் மேற்கு நாகரீகத்தால் ஆளப்பட்டு மிகச் சிக்கலான ஒரு கட்டத்திற்கு வந்து நிற்கும் இக்காலப் பிரிவிலும் அந்த நூல் தலையிட்டு மனிதனைக் காக்க முடியும். ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி ஓர் உன்னத நாகரீகத்தை இக்கால சூழலிற்கேற்ப மீண்டும் அது படைக்க முடியும.
Be the first to rate this book.