அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை மீண்டும் ஓர் பரந்துபட்ட வாசகப் பரப்பிற்குள் எடுத்துச் செல்லும் சிறு முயற்சிதான் இது. மேலும் ‘வாசகசாலை’ என்ற பெயரை வெறும் வார்த்தையாக இல்லாமல் பட்டி தொட்டிகளெங்கும் ஏழை எளிய மக்களிடையே அறிவுச் செயல்பாடாய் மாற்றிய திராவிட இயக்கத்தின் முன்னோடியான அறிஞர் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மீண்டும் ‘வாசகசாலை’ வழியாகவே வெளியாவது சிறப்புதான் இல்லையா?
அறிஞர் அண்ணா போன்ற தாய்த்தமிழ் முன்னோடிகளது செயல்பாடுகளின் மீதான ஈர்ப்பினால்தான் நமது அமைப்பிற்கும் ’வாசகசாலை’ என்ற பெயரையே வைத்தோம்.
இப்படி வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் இந்நூலுக்கும் நமக்கும் ஓர் அழுத்தமான பிணைப்பு உண்டு. அந்த வகையில் மிகுந்த மனமகிழ்ச்சியோடும் பெருமையோடும் இந்நூலினை வாசகர்களாகிய உங்கள் கைகளில் அளிக்கிறோம்.
Be the first to rate this book.