நீங்கள் கஷ்டப்பட்டு வாங்கிய கார் அல்லது பைக் அல்லது தங்க நகைகள் திடீரென ஒருநாள் காணாமல் போனால்...?
உங்கள் உடல்நிலை திடீரென பாதிப்படைந்து, பல ஆயிரம் ரூபாய்க்கு மருத்துவ செலவு வந்து தொலைத்தால்...?
படாத பாடுபட்டு கட்டிய வீடு திடீரென ஒருநாள் இயற்கைச் சீரழிவினால் பாதிப்படைந்தால்...? இது என்ன விபரீதமான கற்பனை என்று கேட்காதீர்கள். அப்படி ஏதும் நேர்ந்தால் எப்படிச் சமாளிப்பது? அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பதைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
நீங்கள் பாடுபட்டு சம்பாதித்த அத்தனை சொத்துகளுக்கும் அளவற்ற பாதுகாப்பு அளிக்கும் ஜெனரல் இன்சூரன்ஸ் பாலிசி பற்றிய அனைத்து விஷயங்களையும் உங்களுக்கு எளிமையாக எடுத்துச் சொல்கிறது.
ஜெனரல் இன்சூரன்ஸ் பாலிசிகளை எங்கே வாங்குவது? எவ்வளவுக்கு வாங்குவது? இந்த பாலிசிகளை வாங்கினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? வரிச் சலுகை ஏதும் உண்டா? ஒரு முறை பணம் கட்டினால் திரும்பக் கிடைக்காது என்கிறார்களே! அது எப்படி? இப்படி உங்களுக்கு எழும் அத்தனை சந்தேகங்களுக்கும் விடை இந்தப் புத்தகத்தில். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வழி காட்டும் இந்தப் புத்தகம், உங்கள் புத்தக அலமாரியில் அவசியம் இருக்க வேண்டும்.
Be the first to rate this book.