உலகப் புகழ் பெற்ற நாவல் 'ஆலீஸின் அற்புத உலகம்' தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் ஆசிரியர் லூயிஸ் கரோல் குறித்த கட்டுரை ஒன்றையும் எஸ். ராமகிருஷ்னன் வழங்கியுள்ளார். ஆஸ்திரேலிய ஹோமியோபதியர் லிஸ் லேலர் ஆலீஸின் பாத்திரத்தை ஹோமியோ-உளவியல் பகுப்பாய்வு செய்து, அகேரிகஸ் மஸ்கேரியஸின் ஆளுமையாக விளக்குகிறார். ஆலிஸ், ஒரு கம்பளிப்புழுவின் தூண்டுதலில், ஒரு காளானின் ஒரு பக்கத்தைக்கடித்ததும், விண்ணுயரம் பெறுகிறாள். பிறிதொரு பக்கத்தைக் கடித்ததும், ஒரெ ஒரு அடி உயரத்திற்கு குறுகுகிறாள். ஆபத்துக்கள் குறித்த கவனம் ஏதுமின்றி, சாகஸத்தில் ஈடுபாடு கொள்கிறாள். தான் மிகுந்த சக்தி பொருந்தியவள் என நம்புகிறாள். தன் உடலின் சாத்தியப்பாட்டு எல்லைகளைத்தாண்டி இயங்குகிறாள்.. அவளுக்குப் பொருட்கள்/உருவங்கள் குறித்த உயர அளவுகோள்கள் தவறாகவே அமைகின்றன.
Be the first to rate this book.