தொலைபேசியைக் கண்டுபிடித்தவரா?ஹார்மானிக் டெலிகிராஃபியைக் கண்டுபிடித்தவரா?விமானத்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவரா? காதுகேளாதவர்களுக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியரா?
ஒரு வட்டத்துக்குள் சிக்காத மாமேதை, கிரஹாம் பெல்.மேதைகளின் வாழ்வில் சுவாரசியத்துக்கா பஞ்சம்? தன் வாழ்நாளில் முழுநேரக் காதலராகவும் பகுதிநேரக் கண்டுபிடிப்பாளாராகவும் இருந்தவர் அவர்.பகுதி நேரமே இத்தனை பிரமாதம் என்றால், மனிதர் எப்படி இயங்கியிருப்பர் என்று யோசித்துப் பாருங்கள்!
கிரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தபோது எழுந்த சர்ச்சைகள் கொஞ்சநஞ்சமல்ல.அவர்மீதும் அவருடைய கண்டுபிடிப்புகளின் மீதும் நூற்றுக்கணக்கான வழ்க்குகள் தொடரப்பட்டன.காதலித்து,கண்டு பிடித்தது போக, மிச்சமிருந்த பொழுதுகளை வழக்குகளுக்காகவே செலவழித்தார்!
ஆனால், பிரச்னைகள் திரும்பத் திரும்ப எழுந்த போதெல்லாம், அவற்றை சட்டையில் ஒட்டிய தூசியைத் தட்டுவதுபோலத் தட்டிவிட்டு, தன்னை ஒரு புதிய மனிதராகப் புதுப்பித்துக் கொண்டவர் கிரஹாம் பெல்.
படித்துப் பாருங்கள்! இந்தச் சாதனையாளரின் வாழ்க்கை உங்களைச் சிலிர்த்துக் கொண்டு எழவைக்கும்!
Be the first to rate this book.