இன்றைய சூழ்நிலையில் ரமளான் நோன்பு ஓர் சடங்காக, ஒரு ஆரவார விழாவாக அமைந்து விட்டதோ என்ற சந்தேகம் எழும்புவதால் அதை கோடிட்டு காட்டும் விதமாக ‘ரஹ்மானை வணங்காமல் ரமளானை வணங்கியதால்தான் ரமளான் முடிந்ததும் ஒரு மாதத்துடன் முடித்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வராமல் இருந்து விட்டார்களோ’ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி அதற்கு தீர்வையும் நூலாசிரியர் அளித்துள்ளார்.
மறுமையில் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல காரணமாக இருப்பவை எவை? இறை நெருக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் இறையில்லத்தில் தங்கும் இஃதிகாஃபின் நன்மைகள் என்ன? பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் மாதமாக ரமளான் திகழ்வதால் கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்வது எப்படி? என்பவைகளை சிறப்பாக நூலாசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி எடுத்து வைத்துள்ளார்.
Be the first to rate this book.